ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்...

Disney cruise: நடுக்கடலில் விழுந்த 5 வயது மகள்; சட்டென குதித்த தந்தையின் வீரச் செயல்| Viral Video

டிஸ்னி க்ரூஸ் லைன் கப்பல் அமெரிக்கா, சிங்கப்பூர், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாட்ட கப்பல் சுற்றுலாப் பயணத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பல பகுதிகளில் இந்தக் கப்பல் சுற்றுலாப் பயணம் பிரபலமாக இருக்கிறது. இந்தக் கப்பலில்...

போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்

சிவகங்கை: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச்...

மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் – மத்திய பிரதேச கொடூரம்

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் என்ற வாலிபர் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியில் சந்தியா என்ற 12வது...

பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

புதுடெல்லி: அனைத்து பயணிகளின் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் நோக்கில், ரயில்ஒன் செயலியை(RailOne App) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரயில்வே தொடர்ந்து நடவடிக்கைகளை...

சித்தராமையா Vs DK சிவக்குமார்: கர்நாடகா முதலமைச்சர் பதவி மோதல்; என்ன நடக்கிறது கர்நாடகா காங்கிரஸில்?

‘அடுத்த முதலமைச்சர் யார்?’ – இந்தக் கேள்வி தான், தற்போது கர்நாடகாவில் மையம் கொண்டுள்ளது. ‘இதில் என்ன பிரமாதம் அங்கே தேர்தலாக நடக்கவிருக்கலாம்!’ என்று கடந்துவிடாதீர்கள். கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தல் 2023-ம் ஆண்டு மே மாதம் தான் நடந்து முடிந்தது....

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக அரசு நியமித்துள்ள குழுவை அணுக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக்...

`மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி திணிப்பு வாபஸ்'-வெற்றிக்கூட்டத்தில் பங்கேற்கும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1-5வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு மராத்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரும் மாநில அரசின்...

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”பாஜக மத்திய...

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' – அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை திமுக உறுப்பினர்களாக...