
நம் வாழ்க்கையில் டாடா, பிர்லா மாதிரி பல ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒன்று, இரண்டு கோடி ரூபாயையாவது சேர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படத்தான் செய்கிறோம். ஆனால், பல வழிகளிலும் பணத்தைச் சேர்த்த பிறகு நம் ஆசை நிறைவேறி இருக்கிறதா? நம்மிடம் இப்போது ஒன்று அல்லது இரண்டு கோடி ரூபாய் அளவுக்குப் பணம் இருக்கிறதா?
வரவும் செலவும்…
இன்றைக்குப் பலருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்னை, வரவும் செலவும் சரியாக இருப்பதுதான். மாதச் சம்பளம் வாங்குகிற பலரும் சொல்வது என்ன? ‘’நான் சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. வருகிற வருமானம் அனைத்தும் செலவு ஆகிவிடுகிறது’’ என்பதுதான்.
இதற்கு முக்கியமான காரணம், நம்முடைய செலவு நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதுதான். நம்முடைய வருமானம் மிகக் குறைந்த அளவில் இருக்கும்போது அல்லது நம்முடைய செலவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, வருமானம் எல்லாம் செலவாகிவிடுவது பல குடும்பங்களிலும் வழக்கமான விஷயமாக இருக்கிறது.

கடன் வாங்கிச் செலவு…
நம்முடைய செலவு நம்முடைய வரவைவிட அதிகமாக இருக்கும்போது கடன் வாங்கி செலவு செய்கிறோம். ஆனால், கடன் வாங்கிவிட்டால், அதை வட்டியோடுதான் திரும்பக் கட்டவேண்டும். இந்த வட்டி செலவு நம்முடைய பொருளாதார நிலையை மேலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும். நம்முடைய வாழ்க்கை தரத்தை மேலும் குறைக்கவே செய்யும்.
நமக்குத் தெரிந்த சேமிப்புகள், முதலீடுகள்…

நல்ல வேளையாக, நமக்கு வரும் வருமானத்தை எல்லாம் நாம் செலவு செய்துவிடுவதில்லை. அதில் ஒரு பகுதியை எடுத்து சேமிக்கவே செய்கிறோம். உதாரணமாக, வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் மூலம் பணம் சேர்க்கிறோம்.
நமக்குத் தெரிந்த ஒருவர் நடத்தும் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டுகிறோம். நகை சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டுகிறோம். இன்ஷுரன்ஸ் திட்டங்களை சேமிப்புத் திட்டங்கள் என்று நினைத்து, பணம் கட்டுகிறோம்.
சரியான முதலீட்டு வழிகள் என்ன?

இந்தத் திட்டங்கள் எல்லாம் குறுகிய காலத்துக்கானவை. இந்தத் திட்டங்கள் எல்லாம் சரியானவைதானா, நம்முடைய பணத்தைப் பல மடங்காகப் பெருக்க இன்னும் சிறப்பான திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.
இந்தத் திட்டங்களை எல்லாம் விட அதிக வருமானம் தரும் திட்டம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், என்கிற இந்த வீடியோவை அவசியம் பாருங்கள்.
இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, அதன்படி நடக்கத் தொடங்கினால், நீங்கள் நினைக்கிற மாதிரி உங்கள் பணத்தைப் பல மடங்காகப் பெருக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!