
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
கிரிக்கட்டின் அதிரடி வீரர் ‘சேவாக்’ அவர்களின் ஆட்டத்தை உலகமே பிரமித்து கரகோசத்துடன் பார்க்கும் , அதே போல் ‘சச்சின்’ நிதானமான ஆட்டத்தையும் இரசிக்க உலகமே இருக்கிறது , ‘சேவாக்’ சட்டென்று அவுட்டானால் ரசிகர்களின் கரகோசம் அடங்கி விடும் , ‘சச்சின்’ மெல்ல தட்டி தட்டி நிதானமாக அடித்து விளையாடினால் ரசிகர்களுக்கு எப்படியோ சச்சினை நம்பி இந்த போட்டியை பார்க்கலாம் கட்டாயம் இந்தியா ஜெயித்து விடும் என்ற நம்பிக்கை பிறக்கும். அதிரடியை விட நிதானத்தையே மக்கள் கூட்டம் விரும்புகின்றனர்.
ஒரு நேர்காணலில் இயக்குனர் ‘திரு.அமீர்’ ஒரு படப்பிடிப்பில் நடிகர்களிடம் கொஞ்சம் கோபமாக நடக்கும் படி ஆனது என்று கூறி இருப்பார், அவர் நினைத்த காட்சி நினைத்தது போல் வர நடிகர்களிடம் கடுமையாக இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது, அந்த படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்த போது படத்தில் நடித்த ஒரு குணசித்திர நடிகர் மட்டும் அவரை வந்து பார்த்தார் என்று கூறி இருப்பார். பல விருதுகள் வாங்கியும் அதில் நடித்த நடிகர்கள் யாரும் அவரோடு இன்று நட்பில் இல்லை என்று கூறி இருப்பார்.
நான் சில வருடங்கள் முன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எனக்கு ஒரு டீம் மேனேஜர் ‘காவ்யா’ என்று ஒருவர் இருந்தார். சேல்ஸில் வேலை பார்ப்பவர்கள் பில்லிங்க் போட பில்களை தாமதமாக தருவர் தவறாக தருவர் நான், என்னோடு வேலை பார்த்த சிலர் ‘சேல்ஸ்’ வேலை செய்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வோம், ஆனால் ‘காவ்யா’ அவர்கள் மட்டும் மிக இயல்பாகவும் , எதிர் முனையில் சிலர் கோபமாக பேசினாலும் ‘காவ்யா’ நிதானம் இழக்காமல் பேசுவார்.
ஒரு முறை ‘சேல்ஸ்’ மேனேஜருக்கு கொடுக்கப்பட்ட டார்கெட் அவரால் அந்த மாதம் முடிக்க இயல வில்லை சேல்ஸ் மேனேஜரின் சம்பளத்தை ஹோல்ட் செய்ய சொன்னதால் ‘காவ்யா’ ஹோல்ட் செய்தார். ஆனால் சம்பளம் போடும் காலையில் ‘சேல்ஸ் மேனேஜர்’ , ‘காவ்யா’ விடம் இன்னைக்கு 3 டார்கட் பிடிச்சா போதும் டார்கட் அச்சீவ் ஆகும் எனக்கு சம்பளம் போட்டுருங்க என் பொண்ணுக்கு உடம்பு சரியில்ல 3நாள் அரசு தொடர் விடுமுறை வேற காசு இல்லாம சமாளிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் ‘அலுவலக எம்டீ’ ‘சேல்ஸ்மேனேஜரின்’ சம்பளத்தை ஹோல்ட் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னதால் வேறு வலியின்றி ஹோல்ட் செய்தார் ‘காவ்யா’.
மாலை நேரத்தில் எங்கள் அறைக்கு வந்த ‘சேல்ஸ் மேனேஜர்’ , ‘காவ்யாவிடம்’ “அக்கவுன்ஸ் டிப்பார்ட்மென்ட்ல பிச்சை எடுக்கறதா மேடம் என்று கோபமாக பேசினார் இல்லை கத்தினார்”. ‘காவ்யா’ கோபமாக பேசாமல் “ஸாரி சார் ‘எம்டீ’ உங்க சம்பளத்த ஹோல்ட் பண்ண சொன்னாங்க , நீங்க டார்கட் அச்சீவ் பண்ணீடீங்கன்னு சொல்லியும் கேட்கல , என் சம்பளத்தை உங்க அக்கவ்ன்ட்டுக்கு அனுப்சிட்டன் பிளீஸ் பாருங்க உங்க பாப்பாவ ஹாஸ்பிட்டல் செலவிற்க்கு வெச்சுக்கோங்க உங்களுக்கு சம்பளம் செவ்வாய்கிழமை ரிலீஸ் பன்ன சொன்னாங்க அப்ப நீங்க நான் குடுத்த காச எனக்கு மாத்தி விடுங்க என்றார்”. ‘சேல்ஸ் மேனேஜர்’ அவரின் அக்கவுன்ட்டை பார்த்து ஸாரி மேம் தேங்க்ஸ் ரொம்ப ஸாரி தெரியாம திட்டீட்டன் உங்கள “ என்று கூறிவிட்டு குற்ற உணர்வாக போனார்..
அன்று மாலை நல்ல மழை பெய்ததால் பேருந்தில் வந்தவர்களை அலுவலக காரில் வீட்டில் விட்டனர், நானும் – ‘காவ்யா’ அக்காவும் பக்கத்து தெரு , நான் காரில் சென்று கொண்டு இருக்கும் போது அவரிடம் கேட்டேன், “எப்படி மேம் ‘ஸேல்ஸ் மேனேஜர்’ உங்கள அசிங்க படுத்தற மாறி பேசியும் நீங்க ரொம்ப சாதாரனமா இருந்தீங்க”, ‘காவ்யா’ மேம் , “கொஞ்ச வருஷம் முன்னாடி என் அப்பாகிட்ட ஒரு நைட் ரொம்ப கோபமா பேசிட்டேன் அடுத்த நாள் காலையில அவரு எங்ககூட இல்ல என்னாளதான் அப்படி ஆச்சுன்னு எனக்கு குற்ற உணர்வு ஆச்சு அப்ப இருந்து யாருகிட்டையும் நான் கோபப்படுறதே இல்ல” என்றார்.

‘காவ்யா’ இதை கூறும் போது என் வாழ்வில் நான் செய்த கசப்பான நிகழ்வு ஒன்று என் நினைவுக்கு வந்தது தனியார் வங்கியில் நான் அக்கவுன்ட் ஆரம்பித்த போது அந்த வங்கியில் இருக்கும் விதிகள் மற்றும் மற்ற வசதிகளை பற்றி கூறுவதற்கு அந்த வங்கியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ‘வங்கியின் பெண்’ வசதிகளைப்பற்றி கூறிவந்தார் நான் சட்டென “மேம் என்ன மேம் பேசிட்டே இருக்கீங்க என்று கடுமையாக பேசினேன் இணைப்பில் இருந்த வங்கி பெண் என்னிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார் நான் துண்டித்துவிட்டேன்.
இது நடந்து 2-3 நாட்களில் என் அலுவலக வேறு ஒரு கிளையில் இருந்தேன் அப்போது எனக்கு என் மேனேஜரிடம் இருந்து தொலைப்பேசி வந்தது வேலையில் ஏதோ சின்ன தவறு செய்ததற்காக கடுமையான வார்த்தைகளில் திட்டினார், அதன் முன்னர் பல முறை பெரிய தவறுகள் எல்லாம் செய்திருக்கிறேன் அப்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தி தன்மையாகவே பேசுவார், நான் எதுவுமே அவரிடம் பேசவில்லை சட்டென்று தொலைப்பேசியை கோபமாக பேசிக்கொண்டு இருக்கும் போதே வைத்து விட்டார் என் ‘மேனேஜர்’.
எனக்கு ஒரு 4-5 நாள் கழித்து நான் ‘வங்கிப்பெண்ணிடம்’ கடுமையாக பேசியது நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. நான் செய்த தவறுக்கு என் மேனேஜரிடம் நான் திட்டு வாங்கியதே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை , எந்த தவறும் செய்யாமல் அவர்கள் வேலையை செய்த அந்த ‘வங்கிப்பெண்ணை’ நான் கடுமையாக பேசியபோது எவ்வாறு அந்த பெண்ணின் மனநிலை இருந்திருக்கும், அதிலிருந்து மீண்டு வந்து அடுத்த நபரிடம் இயல்பாக பேசி இருந்திருப்பாரா அந்த ‘வங்கிப்பெண்’.
அடுத்த சில நாட்களில் அலுவலகத்தில் சில தவறுகள் செய்து சேல்ஸ் ஆட்கள் வந்தனர் , நான் கோபமாக எதுவும் அவர்களிடம் பேசாமல் இயல்பாக பேசினேன். இதை கவனித்த ‘காவ்யா’ அக்கா ஒரு நாள் என்னிடம் “குட் தம்பி எல்லாருகிட்டையும் நார்மலா பேசுற ” என்று எனக்கு ஒரு பெரிய மிட்டாய் தந்தார்.

‘காவ்யா’ அக்கா கொடுத்த மிட்டாயை நான் சாப்பிட பிரித்தேன் அப்போது ஒரு வங்கியிலிருந்து லோன் வேண்டுமா என்று எனக்கு அழைப்பு வந்தது என் தொலைப்பேசிக்கு, நான் அவர்களிடம் “ஸாரி எனக்கு இப்ப வேண்டாம் , நான் தொலைப்பேசியை வெச்சிடுறங்க அலுவலகத்தில இருக்கன்” என்று கூறி நிதானமாக வைத்து விட்டேன் , மிட்டாயை முதல் கடி கடித்து மெல்லும் போது எனக்கு இப்போது ‘லோன்’ வேண்டுமா என்று அழைத்த பெண் போல் அன்று ஒரு நாள் தனியார் வங்கியில் எனக்கு அதன் விதிமுறைகளை பற்றி கூறிய பெண்ணை நான் திட்டியது இடி போல் இறங்கியது எனக்குள் , ‘காவ்யா’ அக்கா என் நிதானத்தை பாராட்டி தந்த மிட்டாயின் முதல் கடியை மென்று முழுங்க முடியவில்லை , இது வரையிலும் நான் சாப்பிட்ட மிட்டாய்கள் இனித்துதான் இருந்திருக்கிறது முதல் முறை மிட்டய் கசக்குகிறது அது ஏன் என்று உங்களுக்கும் தெரியும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.