
நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவை என்று எடுத்துக்கொண்டால் தந்தையின் பெயருடன், குழந்தையின் பெயர் இணைந்திருக்கும்.
அரபு நாட்டில் தந்தை, குடும்பம் போன்றவற்றைச் சொல்லும் வகையில் பெயர் அமைக்கப்படுகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோல மரபுகள் இருக்கும். ஆனால் இங்கு ஒருவர் 2,253 சொற்கள் கொண்ட நீண்ட பெயரைச் சட்டபூர்வமாகக் கொண்டவராக உள்ளார்.
1990 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் பிறந்த லாரன்ஸ், சட்டரீதியாக தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பலருக்கும் சாதனைகள் மீது ஆர்வம் இருக்கும். முடிந்த சாதனைகளைச் சிலர் முயற்சி செய்வார்கள், நானும் என் பெயரில் சாதனை செய்த முடிவு செய்தேன்.
குடியரசு நீதிமன்றம் முதலில் என் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால் பதிவு அலுவலகம் மறுத்ததால், உயர் நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றேன். நான் வேலை பார்த்த நூலகத்தில் இருந்து புத்தகங்கள் வாயிலாக பெயர்களைத் தேர்ந்தெடுத்தேன். சக நண்பர்கள் பரிந்துரைத்த பெயர்களையும் சேர்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.
இவரது புதிய பெயரை அரசு அடையாள ஆவணங்களில் பதிவு செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பெயர் பதிவு தொடர்பான நியூஸிலாந்து நாட்டில் இரண்டு சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.