• October 11, 2025
  • NewsEditor
  • 0

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான வாகன விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அங்குள்ள பாட்டியானா என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும்(35), அவரது கணவர் ஹரிஓம் என்பவரும் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

அவர்கள் அங்குள்ள தெளலானா-குலாவதி சாலையில் இருக்கும் கங்கை ஆற்று கால்வாய் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது எதிரில் லாரி ஒன்று வந்தது. மேம்பாலத்தில் இருந்த பள்ளம் ஒன்றைத் தவிர்ப்பதற்காக லாரி டிரைவர் லாரியை லேசாகத் திருப்பினார்.

அந்நேரம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்துகொண்டிருந்த ஹரிஓமும், அவரது மனைவியும் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது. இதனால் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் மேம்பாலத்தில் இருந்து தூக்கி கீழே வீசப்பட்டனர்.

விபத்து

இதில் கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். அனுராதா மிகவும் மோசமாக காயமடைந்து சாலையில் தூக்கி வீசப்பட்டு கிடந்தார். அவரது நெஞ்சுப்பகுதியில் இருந்து இதயம் வெளியில் வந்து சிறிது நேரம் துடித்துக்கொண்டிருந்தது.

அதனை அருகில் கிடந்த அவரது கணவன் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் இருந்தார். அவர்களைக் காப்பாற்ற ஓடி வந்த பொதுமக்கள் அனுராதாவின் இதயம் வெளியில் வந்து துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவரது கணவர் கண் முன்பாகவே அனுராதா சிறிது நேரத்தில் இறந்து போனார்.

உள்ளூர் மக்கள் விரைந்து செயல்பட்டு ஹரிஓமை மருத்துவமனையில் சேர்த்தனர். லாரி டிரைவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் ஹரிஓமின் இரண்டு மகன்களும் தங்களது தாயை இழந்துள்ளனர். ஹரிஒம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

தெளலானா-குலாவதி பல ஆண்டுகளாக மிகவும் மோசமாக சேதம் அடைந்து இருப்பதாகவும் இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *