• October 11, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு இன்று 83வது பிறந்தநாளாகும். ஒவ்வொரு பிறந்தநாளையும் அமிதாப்பச்சன் மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடுவது வழக்கம். அவரது ரசிகர்கள் முதல் நாள் இரவில் இருந்தே அமிதாப்பச்சன் வீட்டிற்கு வெளியில் காத்திருப்பது வழக்கம்.

நள்ளிரவில் அமிதாப்பச்சனும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த ஆண்டும் இன்று அதிகாலையில் இருந்தே அமிதாப்பச்சன் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அமிதாப்பச்சனின் வீட்டிற்கு வெளியில் திரளாகக் கூடினர். ரசிகர்கள் கூலி போன்ற படங்களில் அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் போன்று உடையணிந்து வந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அமிதாப்பச்சன் வீடு மும்பை விலேபார்லேயில் உள்ள ஜுகு பகுதியில் இருக்கிறது. ஜல்சா என்ற அந்த பங்களாவிற்கு வெளியில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அமிதாப்பச்சனின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

அமிதாப் பச்சன் ரசிகர்கள்

அதோடு அவர்கள் அமிதாப்பச்சனின் பாடல்களுக்கு பங்களாவிற்கு வெளியில் நின்று நடனமாடினர். மேலும் ரசிகர்கள் அமிதாப்பச்சனின் படம் வரையப்பட்ட டி-சர்ட் அணிந்தும், உடம்பில் அமிதாப்பச்சனின் டாட்டூ வரைந்து வந்திருந்தனர்.

சில ரசிகர்கள் அமிதாப்பச்சனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வரும் போதே கேக் கொண்டு வந்தனர். அந்த கேக்கை அமிதாப்பச்சன் வீட்டிற்கு வெளியில் வைத்து வெட்டி அமிதாப்பச்சனின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அமிதாப்பச்சன் வீட்டிற்கு வெளியில் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்திருந்த ரசிகர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ”இன்று நூற்றாண்டின் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள். எங்களுக்கு இன்றுதான் தீபாவளி மற்றும் ஹோலி. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கட்டும்” என்று அவர் உற்சாகமாகக் கூறினார்.

பிகாரில் இருந்து வந்த மற்றொரு ரசிகர் இது குறித்து கூறுகையில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருதேவ்” என்று கூறினார். அமிதாப்பச்சனின் பிறந்தநாளைக் கொண்டாட சத்தீஷ்கரில் இருந்து வந்த மற்றொரு ரசிகர் தனது கையில் டாட்டூ வரைந்து வந்திருந்தார். பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் பேனர்களையும் அங்குக் கட்டி இருந்தனர்.

அமிதாப்பச்சன் மகாராஷ்டிராவின் கடற்கரை பகுதியான அலிபாக்கில் ரூ.6.6 கோடிக்கு மொத்தம் மூன்று பிளாட்டுகளை வாங்கி இருக்கிறார். இரண்டு பிளாட் தலா 2,773 மற்றும் 2,776 சதுர அடி கொண்டதாகும். மற்றொரு பிளாட் 4047 சதுர அடி கொண்டதாகும். இதற்கு முன்பும் பல முறை அமிதாப்பச்சன் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *