
சென்னை: “அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் பாஜகவைக் கூட பழனிசாமி கழற்றிவிடத் தயாரக இருப்பார். ஆனால் விஜய் வருவாரா என்பது தெரியாது. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. அவரது தொண்டர்கள் அதை ஏற்பாரா? இல்லை விஜய் வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தூக்கி பிடிப்பாரா?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ 2024 மக்களவைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து, அதிமுக ஏன் வெளியேறியது. அது பாஜகவுக்கு முக்கிய தேர்தலாகவும் அமைந்திருந்த சமயத்தில், கூட்டணியை விட்டு வெளியே வந்து பாஜவுக்கு எதிராக பேசினார்கள். பழனிசாமி நம்பக தன்மையற்றவர், அவருக்கு துரோகத்தை தவிர எதுவும் தெரியாது.