
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, அஸ்வின் உள்ளிட்டோரின் மோசமான இன்னிங்ஸ்களால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது.
இருப்பினும், லீக் போட்டிகளின் கடைசி கட்டத்தில் அணிக்குள் வந்த ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் பதிந்ததோடு அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றனர்.
இவ்வாறிருக்க, 2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவிருக்கிறது.
நவம்பர் 15-க்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
இவ்வாறிருக்க, சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை ரிலீஸ் செய்யப்போகிறது என்ற தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக முக்கியமான ஸ்போர்ட்ஸ் ஊடகத்தின் கூற்றுப்படி, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, சாம் கரண், டெவோன் கான்வே ஆகியோரை சிஎஸ்கே விடுவிக்கப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது.

சமூக வலைத்தளங்களிலும் இந்த லிஸ்ட் வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய பேச்சு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் ரியாக்ட் செய்திருக்கிறது.
தனது எக்ஸ் தளப் பக்கத்தின் பயோவில், “நீங்கள் இதில் பார்க்கும் வரை எதுவும் அதிகாரப்பூர்வமானது இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறது.
மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சிஎஸ்கே கழற்றிவிடக்கூடும் என்று உங்களின் கணிப்புகளை கமெண்ட்டில் பதிவிடவும்.