
பெங்களூரு: முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடாவுக்கு (92) கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவருக்கு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சரும், தேவகவுடாவின் இளைய மகனுமான குமாரசாமி நேற்று தனது தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.