
சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாதக் குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தியை 2 சிகிச்சைகள் மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் லட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையானது தனது தாயின் மூக்குத்தியை கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக அந்த மூக்குத்தி சுவாசப் பாதைக்குள் சென்றுவிட்டது. குழந்தையின் இடது பக்க நுரையீரல் சுவாசப் பாதையின் அடிப்பகுதியில் மூக்குத்தி சிக்கிக் கொண்டுள்ளது.