• October 11, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா 24 வயது மாடல் மஹிகா சர்மாவுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேற்றைய தினம் (அக்டோபர் 10) இருவரும் ஒன்றாக மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஹர்திக் தனது இன்ஸ்டாகிராமில் மஹிகாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.

Hardik Pandya

இன்று அக்டோபர் 11 பாண்டியாவின் பிறந்தநாள். உலகின் நம்பர் 1 டி20 ஆல் ரவுண்டராக இருக்கும் அவர், பிறந்தநாள் விடுமுறையை காதலியுடன் கழித்துள்ளார்.

மேலும் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார் ஹர்திக். அவரது மகன் அகஸ்தியா, அம்மா, பாட்டியுடன் பிறந்தநாள் கேக்கையும் பகிர்ந்துகொண்டார்.

Hardik Pandya-வின் Unofficial Confirmation?

கடந்த சில மாதங்களாக ஹர்திக் மற்றும் மஹிகா உறவில் இருப்பதாகப் பேசப்பட்டு வந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமைதான் முதல்முதலாக மும்பை விமானநிலையத்தில் ஒன்றாகப் பார்க்கப்பட்டுள்ளனர்.

Hardik – Maheika

மஹிகா இந்தியாவின் சிறந்த வடிவமைப்பாளர்களுடன் பணியாற்றும் மாடலாக இருக்கிறார். சில இசை வீடியோக்களிலும் நடிகையாக தோன்றியுள்ளார். அவரது பொது வாழ்க்கை பற்றி ஆன்லைனில் பகிரப்படும் தகவல்கள் இல்லை.

முன்னதாக நடிகையும் மாடலுமான நடாசா ஸ்டான்கோவிக் உடன் உறவில் இருந்தார் ஹர்திக் பாண்டியா. அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார். இருவரும் பிரிந்த பிறகு அவர் ஜாஸ்மீன் வாலியா என்ற மாடலை டேட் செய்வதாக தகவல்கள் வெளியாகின.

மஹிகா உடனான உறவு குறித்து எதுவும் பேசாமல், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தெரியப்படுத்துவதை “அதிகாரப்பூர்வமற்ற உறுதிப்படுத்தல் (Unofficial Confirmation)” என நெட்டிசன்கள் அழைக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *