
சென்னை: இஸ்ரேல் பிரதமரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப் படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.