
மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.