
புதுடெல்லி: சர்வதேச கல்வி மற்றும் திறன் தொடர்பான ‘வீபாக்ஸ்’ அமைப்பு ‘இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் – 2025’ஐ வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு கடந்த 7 ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு தேர்வில் 45.6 சதவீத பெண்கள் வேலைக்கு தகுதியானவர்களாக இருந்துள்ளனர். நடப்பாண்டில் இது 47.53 சதவீதமாக உள்ளது. இது வேலைவாய்ப்புகளில் உள்ள முன்னேற்றம் மற்றும் சவால்களுக்கு பெண்கள் தயாராவதையே காட்டுகிறது.