• October 10, 2025
  • NewsEditor
  • 0

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் நபர்களை இறக்கியுள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சீசனில் குக் வித் கோமாளி பிரபலம் கனி திரு கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருக்கு காரக்குழம்பு கனி என்று இன்னொரு பெயரும் உண்டு.

Bigg Boss advice to Kani thiru

இவர் குக் வித் கோமாளியில் காரக்குழம்பு வைத்து பிரபலமானது தான் இந்தப் பெயருக்குக் காரணம்.

தற்போது பிக் பாஸ் சீசனிலும் வந்து சமையல் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்துக் கொண்டிருந்த கனியை சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்தனர்.

“வந்த வேலையை மறந்துவிட்டு சமையலிலேயே மூழ்கிவிட்டார்” என்று ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் கனியை அழைத்து அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதாவது, “உங்களை இங்க நிறைய இடங்களில் பார்க்கவே முடியலையே என்ன ஆச்சு” என்று பிக் பாஸ் கேட்க, அதற்கு கனி சமையல் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று பதில் அளித்தார். உடனே பிக்பாஸ், “நீங்க நல்லா சமைப்பீங்கனு எல்லாருக்கும் தெரியும்.

அதுக்கு பாராட்டுகளும் கிடைச்சுது. இந்த நிகழ்ச்சி நீங்க யாரு, எப்படிப்பட்டவர் என்பதைக் கடந்து, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டத்தான். சமையலைக் கடந்து நிறைய இருக்கு. அந்த திறமைகளை வெளியே காட்டுங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இந்த வீடியோ கிளிப் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *