• October 10, 2025
  • NewsEditor
  • 0

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள். 94 பேர் நிறுவனங்கள். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad). இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.

அமைதிக்கான நோபல் பரிசு

1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர இவர் முக்கிய காரணம்.

ஜனநாயகப் போராட்டங்களின் போது, இவர் பல நாள்கள் மறைந்து வாழ்வதாக இருந்தது. இவரது உயிருக்கு மிகுந்த ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார்.

இவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, போராட்டத்தை அமைதி முறையில் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார்.

மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)

இவருக்கு இந்தப் பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

ட்ரம்பிற்கு ஏன் நோபல் அமைதி பரிசு கிடைக்கவில்லை?

இந்தப் பரிசுக்கான பரிந்துரைகள் ஜனவரி 31-ம் தேதிக்குள் சென்றிருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் எந்தெந்தப் போரை நிறுத்தியதாகக் கூறுகிறாரோ, அவைப் பெரும்பாலும் நடந்தது ஜனவரிக்குப் பிறகே.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *