
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி சந்தோஷ் குஷ்வாஹா, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணையவுள்ளார். இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிஹாரின் பூர்னியா தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த சந்தோஷ் குஷ்வாஹா ஆர்ஜேடி கட்சியில் இணையவுள்ளார். அவருடன் தற்போதைய பங்கா தொகுதி ஜேடியு எம்.பி கிரிதாரி யாதவின் மகன் சாணக்ய பிரகாஷ் ரஞ்சன் மற்றும் முன்னாள் ஜஹானாபாத் தொகுதி எம்.பி ஜெகதீஷ் சர்மாவின் மகனும், முன்னாள் எம்எல்ஏவான ராகுல் சர்மா ஆகியோரும் ஆர்ஜேடியில் இணைய உள்ளனர்.