
ராமேசுவரம்: தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 5 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 47 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
அன்று இரவு தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஹரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.