
‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து ஜூனியர் என்.டி.ஆர் விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் ராஜமவுலி – ராஜ்குமார் ஹிரானி இருவருமே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தினை அறிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதில் ராஜ்குமார் ஹிரானி படத்துக்கு மட்டுமே ‘தாதா சாகிப் பால்கே’வின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.