
தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் அடுத்த 2 மாதங்களில் 4 மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிக்கு கூடுதலாக 5 லட்சம் பொறுப்பாளர்களை நியமிக்கவும் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'வெல்வோம் 200… படைப்போம் வரலாறு என்ற முழக்கத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது ஆளும் கட்சியான திமுக. அதன் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசி உட்கட்சி பிரச்சினைகளை சரிசெய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், எம்.பி-க்களுக்கும் தேர்தல் பொறுப்பு, பாக முகவர்கள் கூட்டம் என பட்டியல் போட்டு பணிகளை முடித்து வருகிறது திமுக.