
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கடந்த திங்கட்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது. அப்போது ராகேஷ் கிஷோர் என்ற 71 வயது வழக்கறிஞர் திடீரென தனது காலணியை தலைமை நீதிபதியை நோக்கி வீசி தாக்க முயன்றார். உடனே நீதிமன்ற காவலர்கள் பாய்ந்து சென்று அவரை பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர்.
இருப்பினும், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னை பாதிக்காது” என்று கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களை தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக்கொண்டார்.