• October 10, 2025
  • NewsEditor
  • 0

காசா – இஸ்ரேல் இடையே நடந்துவரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 20 நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

இந்த நிபந்தனைகள் ஒருதலைபட்சமாக இருக்கின்றன என அரபு நாடுகள் குரலெழுப்பினாலும், தற்போதைய சூழலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் போதும் என்ற மனநிலை உலக நாடுகளுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது.

ட்ரம்ப் – நெதன்யாகு

இந்த நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப்,“எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இதன் பொருள் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மேலும் வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தன் இராணுவத்தை ஒப்புக்கொள்ளப்பட்ட இரு நாட்டின் எல்லைக்கு திரும்பப் பெறும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்! இந்த வரலாற்று மற்றும் முன்னோடியில்லாத நிகழ்வை நிகழச் செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய மத்தியஸ்தர்களான கத்தார், எகிப்து மற்றும் துருக்கிக்கு நன்றி” தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு அணிவிக்கும் ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனப் பதிவிட்டிருக்கிறார்.

அவரின் பதிவில், “அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசை வழங்குங்கள். அவர் அதற்கு தகுதியானவர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *