
சண்டிகர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 1978-ம் ஆண்டில் பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு, 1985-ம் ஆண்டு ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் பப்பர் கல்சாவுக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு திரைமறைவில் செயல்பட்டு வருகிறது.