
இந்திய வானிலை மையம் நேற்று வாராந்திர வானிலை கணிப்பை வெளியிட்டது.
வடகிழக்குப் பருவ மழை எப்போது?
அதில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 16-18 தேதிகளில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் விலகுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசைக் காற்று வீசலாம்.
அந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் தொடங்கலாம்.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்லாம்?
நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி,
இன்று நாளை கோவையின் மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
நாளை (அக்டோபர் 11, 2025), நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
இங்கே கனமழை என்று குறிப்பிடப்படுவது 64.5 – 115.5 மி.மீ மழை ஆகும்.