
பாட்னா: ஆர்ஜேடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிஹாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், “எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு வீட்டிலும் அரசு வேலை உள்ள ஒருவர் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அரசாங்கத்தை அமைத்த 20 நாட்களுக்குள் அதற்கான புதிய சட்டத்தை நாங்கள் உருவாக்குவோம். பதவியேற்ற 20 மாதங்களுக்குள், இந்த திட்டம் மாநிலம் முழுவதும் முழுமையாக செயல்படுத்தப்படும். 20 மாதங்களில் பிஹாரில் ஒரு வீடு கூட அரசு வேலை இல்லாமல் இருக்காது” என்று அவர் கூறினார்.