‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு வில்லன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.