• October 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​ற​வாளி தஷ்வந்​துக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை ரத்து செய்​தும், அவரை விடு​வித்​தும் தீர்ப்​பளித்​துள்ள உச்ச நீதி​மன்​றம் இந்த வழக்​கில் அரசு தரப்பு குற்​றச்​சாட்டை சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்க தவறி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளது.

சென்னை போரூரை அடுத்த மதனந்​த​புரம் பகு​தி​யைச் சேர்ந்த பாபு மற்​றும் ஸ்ரீதேவி தம்​ப​தி​யின் 6 வயது மகள் ஹாசினி. இவர் கடந்த 2017 பி்ப்​.5-ம் தேதி திடீரென மாய​மா​னார். மாங்​காடு போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், குன்​றத்​தூர் பகு​தி​யைச் சேர்ந்த சேகர் மற்​றும் சரளா தம்​ப​தி​யின் 22 வயது மகனான தஷ்வந்த், சிறுமி ஹாசினியை பாலியல் வன்​புணர்வு செய்து பின்​னர் எரி்த்துக் கொலை செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து தஷ்வந்த் கைது செய்​யப்​பட்டு குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த வழக்கு விசா​ரணை செங்​கல்​பட்டு மகளிர் நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *