
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தனது மனைவியுடன் நேற்று (அக்.8) சாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவ ராஜ்குமார், “திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
தற்போது முதல்முறையாக இங்கு வந்து தரிசனம் செய்திருக்கிறேன்” என்ற அவர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருவதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, “தமிழக அரசியல் பற்றி எனக்குப் பெரிய அளவில் தெரியாது.
முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோரை நன்றாகத் தெரியும். விஜய், அரசியலுக்கு வந்தபோது எனக்கு மிகவும் பிடித்தது.
சாதாரண மனிதனாக, கரூர் துயர சம்பவம், எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அடுத்து விஜய் என்ன முடிவு எடுத்தாலும் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
ஒரு நடிகராகவும், ஒரு சகோதரராகவும் இதைக் கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.