
சென்னை: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.