• October 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உள்​நாட்டு நிறு​வன​மான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்​லைன் தளத்​தில் உள்ள மென்​பொருட்​களை அலு​வலக பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​தும்​படி மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்​தில் உயர் அதி​காரி​களுக்கு சுற்​றறிக்கை அனுப்​பியது.

இந்​நிலை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தனது இ-மெ​யில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்​றி​யுள்​ளார். இது குறித்து எக்ஸ் தளத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறி​விட்​டேன். என்​னுடைய இ-மெ​யில் முகவரி மாறி​யுள்​ளதை குறித்​துக் கொள்​ளுங்​கள். எனது புதிய இ-மெ​யில் முகவரி amitshah.bjp@zohomail.in. எனக்கு மெயில் அனுப்​புபவர்​கள், இனிமேல் இந்த இ-மெ​யில் முகவரியை பயன்​படுத்​த​வும்’’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *