
கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம், ‘மவுனம்’.
அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர் ரித்திக், சுமன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார். மேஜிக் மக் மூவிஸ் தயாரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகிறது. அக். 20-ல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 60 நாட்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.