
சென்னை: பணி வரன்முறை செய்யக்கோரி போராடும் கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்கள், தங்களை கள உதவியாளர்களாக பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 10 தலைமை பொறியாளர்கள் அலுவலகங்கள் முன்பு அக்.7 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.