
கோழிக்கோடு: கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன்!! திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும். என்றாலும் அது ஒரு அழகான பசு)" என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பட்-ஐ டேக் செய்து இதனை பதிவிட்ட பிரியங்கா தனது பயணத்தின் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து கொண்டு உள்ளார்.