
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ் தானம் ஒவ்வொரு ஆண்டும் 12 பக்கம், 6 பக்கம் கொண்ட வண்ணமிகு காலண்டர்கள், டேபிள் டாப் காலண்டர்கள், டைரிகளை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த பிரம்மோற்சவ விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2026-ம் ஆண்டுக்கான காலண்டர்கள் மற்றும் டைரிகளை வெளியிட்டார். தற்போது புதிய காலண்டர்கள், டைரிகளை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.