• October 9, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் மாநிலம் ரோட்​டாஸ் மாவட்​டத்​தில் கடந்த சில தினங்​களுக்கு முன்பு கனமழை பெய்து ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் தேசிய நெடுஞ்​சாலை​யின் (19) பல இடங்​களில் வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. இதனால் டெல்​லி, கொல்​கத்தா நெடுஞ்​சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டுள்​ளது.

ரோட்​டாஸ் மாவட்​டம் முதல் அவுரங்​கா​பாத் வரையி​லான 65 கிலோமீட்​டர் தூரத்​துக்கு வாக​னங்​கள் ஊர்ந்​த​படி செல்​கின்​றன. சில கிலோமீட்​டர் தூரத்​தைக் கடக்​கவே பல மணி நேரம் ஆகிறது. இதனால் பல வாக​னங்​கள் கடந்த 4 நாட்​களாக நெரிசலில் சிக்​கித் தவிக்​கின்​றன. இதனால் லாரி​களில் உள்ள அழுகக்​கூடிய பொருட்​களின் நிலை கேள்விக்​குறி​யாகி உள்​ளது. இதனால் வர்த்​தகம் கடுமை​யாக பாதிக்​கப்​படும் என கூறப்​படு​கிறது. மேலும் ஆம்​புலன்​ஸ், அத்​தி​யா​வசிய சேவை​கள், சுற்​றுலா பயணி​கள் உள்​ளிட்​டோரும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *