
சென்னை: திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய “சக்தி” புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.
இது குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து வலுவிழக்க கூடும்.