• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்​தின் தாயார் அம்​சவேணி நேற்று கால​மா​னார். அவருக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பொருளாளர் எல்​.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்​சவேணி(83) உடல்​நலக் குறைவு காரண​மாக கடந்த சில நாட்​களாக மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த நிலை​யில் நேற்று காலை கால​மா​னார். அவரது உடல் சென்னை சாலிகி​ராமத்​தில் உள்ள சுதீஷ் வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்டு இறுதி அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது.

இதையடுத்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் சென்று அம்​சவேணி​யின் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார். முதல்​வருடன் அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, மா.சுப்​ரமணி​யன் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர், திரைப்​பிரபலங்​கள் அஞ்​சலி செலுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *