
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு டிஜிபி அலுவலகத்தில் இன்று (அக்.8) மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கரூர் வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் மட்டும் கரூர் செல்லாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.