• October 8, 2025
  • NewsEditor
  • 0

சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது. பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது.

மலையாள சினிமாவிலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் மோகன்லால். அதே நேரம், மே 2009-லிருந்து இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் வகிக்கிறார்.

ஆகஸ்ட் 2024-ல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.

மோகன்லால்

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியைச் நேற்று டெல்லியில் சந்தித்தார்.

அப்போது ராணுவத் தலைமைத் தளபதி, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு 7 தளபதிகள் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். 

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “ராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவது ஒரு சிறந்த அங்கீகாரம்.

நடிகர் மோகன்லாலை கௌரவித்த இந்திய இராணுவம்
நடிகர் மோகன்லாலை கௌரவித்த இந்திய இராணுவம்

இந்தப் பாராட்டுக்கு தாதாசாகேப் பால்கே விருதும் ஒரு காரணம். கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக, TA பட்டாலியனில் செயல்திறனை எப்படி அதிகரிப்பது, நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் உரையாடல்களை நடத்தினோம்.

இந்திய ராணுவத்தை மையமாகக் கொண்ட படங்களில் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *