
டேராடூன்: உத்தராகண்டில் மதரஸா கல்வி வாரிய சட்டத்துக்கு மாற்றாக சிறுபான்மையினர் கல்வி மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் குர்மீத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதியுடன் மதரஸா கல்வி வாரிய சட்டம் காலாவதியாகிறது.
இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் சிறுபான்மையினர் கல்வி மசோதா, சட்டமாகி உள்ளது. புதிய சட்டத்தின்படி சிறுபான்மையினர் கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையமே சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.