
நாமக்கல்: கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தவெக இழந்துவிட்டது. எனவே, அக்கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று வழிபட்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியினர் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்ற போர்வையில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.
கரூர் நகரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை சரிவர கடைப்பிடிப்பதில்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நெரிசலில் பக்தர்கள் சிக்குவதைத் தடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும்.