• October 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உ.பி.​யில் ஒப்​பந்த துப்​புரவு தொழிலா​ளர்​களுக்கு ரூ.40 லட்​சம் விபத்து காப்​பீடு வழங்​கப்​படும் என அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார்.

உ.பி.​யில் துப்​புர​வுப் பணி​யில் பெரும்​பாலும் வால்​மீகி சமூகத்​தினர் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் தலைநகர் லக்​னோ​வில், பாபா சாகேப் டாக்​டர் பீம்​ராவ் அம்​பேத்​கர் மகாசபா அறக்​கட்​டளை சார்​பில் மகரிஷி வால்​மீகி பிரகத் திவஸ் நடை​பெற்​றது. இதில் முக்​கிய விருந்​தின​ராக முதல்​வர் யோகி பங்​கேற்று பேசி​ய​தாவது: வால்​மீகி பகவானை அவம​திப்​பது ராமரை அவம​திப்​பது போலாகும். இவர்​களை வைத்து எதிர்க்​கட்​சிகள் சாதி அரசி​யல் செய்​கின்​றன. இதிலிருந்து தப்​பிக்க வால்​மீகி சமூகத்​தினர் தங்​கள் குழந்​தைகளுக்கு கல்வி கற்​பிக்க வேண்​டும். வால்​மீகி சமூகத்​தினருக்கு அளிக்​கப்​படும் மரி​யாதை வால்​மீகி​யின் மரபுக்கு செய்​யும் மரி​யாதை ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *