• October 7, 2025
  • NewsEditor
  • 0

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது அதன் ப்ரீக்வலாக ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது.

ருக்மினி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பிரகதி ஷெட்டி

`காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டிதான் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஆடை வடிவமைப்பை செய்துகொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் பணியாற்றியது குறித்து பிரகதி ஷெட்டி சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது.

ஆழமான, இயல்பான, தெய்வீகமான கதைக்காக ஆடை வடிவமைத்து கொடுத்தது வேலை என்பதைத் தாண்டி அது ஒரு உணர்வுபூர்வமாக இருந்தது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *