• October 7, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்கது வரி. இறக்குமதி பொருள்களுக்கு அவர் விதித்த வரிகளால் பொருளாதார சிக்கல்களை அமெரிக்கா சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் மாபெரும் சந்தையாக இங்கிலாந்து (UK) உருவாகியிருக்கிறது.

இது தொடர்பாக சீனாவின் மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான BYD வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “UK-வில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையை ஒப்பிடுகையில் 880% விற்பனை அதிகரித்திருக்கிறது.

BYD கார்

சீனாவை விட UK இப்போது பெரும் சந்தையாக மாறியிருக்கிறது. கடந்த மாதம் இங்கிலாந்தில் மட்டும் 11,271 கார்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதில், Seal U ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டியின் SUV பிளாக் மாடல் பெருமளவில் விற்பனையாகியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

வாகனத் துறையின் அமைப்பான SMMT வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, `கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகள் சீனாவின் இவி வாகனங்களுக்கு 45 சதவிகிதம் வரை கூடுதல் வரி விதித்தது.

அதே போல அமெரிக்கா போன்ற நாடுகளும் வரிவிதிப்பை அதிகப்படுத்தியது. ஆனால் இங்கிலாந்து மின்சார வாகனத்துக்கு எந்த வித சுங்க வரியையும் விதிக்கவில்லை.

அதனால் சீனாவின் BYD போன்ற நிறுவனங்களுக்கு இங்கிலாந்து சிறந்த சந்தையாக இருக்கிறது. கடந்த மாதம் இவி வாகன விற்பனை 73,000 என அதிகரித்திருக்கிறது. பிளாக் இன் ஹைபிரிட் கார்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது.

உலகளவில் அமெரிக்காவின் டெஸ்லாவை விட சீனாவின் BYD முன்னிலையில் உள்ளது. ஜகுவார் போன்ற ஐரோப்பிய ஒன்றிய கார்களைவிட BYD முன்பதிவும் அதிகரித்திருக்கிறது. அதே நேரம் இங்கிலாந்து அரசு இவி பயன்பாட்டை அதிகரிப்பவர்களுக்கு 875 டாலர் தள்ளுபடியையும் அதிகரித்திருக்கிறது. இதனால் கார் உற்பத்தியையும், விற்பனையையும் BYD அதிகரித்திருக்கிறது.

கியா ஸ்போர்டேஜ் (Kia Sportage), ஃபோர்டு பூமா (Ford Puma) மற்றும் நிசான் காஷ்காய் (Nissan Qashqai), சீன மாடல்களான ஜேகோ 7 (Jaecoo 7) மற்றும் BYD சீல் யு ஆகியவை இங்கிலாந்து விற்பனையில் முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *