சென்னை: நடிகர் அஜித் குமார் ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 (Mahindra Formula E Gen 2) என்கிற மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தியுள்ள நிலையில், அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சினிமாவைத் தாண்டி கார் பந்தயத்தில் தொடந்து ஆர்வம் காட்டி வருகிறார் அஜித் குமார். சமீபத்தில் கூட, ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.