
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவர்களின், காலத்தால் அழியாத வடிவமைப்புகள், சிறந்த கைவினைத்திறன் மற்றும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் நீடித்த நம்பிக்கை ஆகியவற்றால் மக்கள் மத்தியில் போற்றப்படுகிறது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, வாடிக்கையாளர்களின் மிகவும் அர்த்தமுள்ள நிகழ்வுகளில், தங்களது பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்பு நகைகளால் ஓர் அங்கமாகும் மரபை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இன்று, தென் இந்தியாவில் 65 மற்றும் சிங்கப்பூரில் 1 கிளை என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ரத்தினக் கற்கள் போன்ற கலெக்ஷகளை வழங்குகிறது.
ஒவ்வொரு தீபாவளியிலும், ஜி.ஆர்.டி. அதன் பிரத்தியேக ‘தங்கத்திற்கு வெள்ளி இலவசம்’ என்ற அதன் பிரச்சாரத்தை கொண்டு வருகிறது, இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தங்க நகை வாங்கும் போதும், வாடிக்கையாளர்கள் சமமான எடையுள்ள வெள்ளியை முற்றிலும் இலவசமாகப் பெறுவார்கள், மேலும் தங்க நகைகளுக்கு கிராமிற்கு ரூ.100 குறைவாக கிடைக்கும். இந்த இரட்டை பலன்கள் பண்டிகை காலத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது. இந்த பிரச்சாரம், தமிழ்நாட்டில் தங்க தீபாவளி என்ற பெயரிலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஸ்வர்ண தீபாவளி என்ற பெயரிலும் முன்னெடுத்து நடத்தப்படுகிறது.
இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி. ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் கூறியதாவது: “தீபாவளி என்பது வெறும் விளக்குகள் மற்றும் கொண்டாட்டங்களைப் பற்றியது மட்டுமல்ல, நாம் விரும்பும் மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் கூட. ஜி.ஆர்.டி.-இல், ஒவ்வொரு நகையும் அந்த நினைவுக்கூர்ந்த தருணங்களின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறது.

இந்த திருவிழா காலத்தை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதுமட்டுமல்லாது, எங்கள் ‘கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி’ நகை சேமிப்புத் திட்டத்திற்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பிற்கு நாங்கள் குறிப்பாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.” என்றார்.