• October 7, 2025
  • NewsEditor
  • 0

இன்றோடு பிரதமர் மோடி மத்திய, மாநில அரசில் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன.

மோடி பதிவு

அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது…

“இன்றுதான் 2001-ம் ஆண்டு, குஜராத்தின் முதலமைச்சராக முதன்முறையாகப் பொறுப்பேற்றேன். சக இந்தியர்களின் தொடர் வாழ்த்துகளுக்கு நன்றி. இன்றோடு அரசின் தலைமைப் பதவி வகிப்பதில் 25-வது ஆண்டுக்குள் நுழைகிறேன்.

இந்திய மக்களுக்கு என்னுடைய நன்றிகள்.

இத்தனை ஆண்டுகளாக, நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நம்மை வளர்த்த இந்தச் சிறந்த தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கும் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

2024-ம் ஆண்டு மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது…

2001 டு 2025

2001-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2014-ம் ஆண்டு வரை அதே பதவியில் தொடர்ந்தார்.

பின்னர், 2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களைக் கடந்து, இப்போதும் பிரதமராகத் தொடர்ந்து வருகிறார்.

மோடியின் 25 ஆண்டுக்கால இந்தப் பயணத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *