
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.