• October 7, 2025
  • NewsEditor
  • 0

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் கட்சியின் பொருளாளர் சுதீஷின் தாயார் திருமதி அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் இல்லத்திலிருந்து ஏவிஎம் மின்மயானம் வரை நாளை மதியம் 1 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

பிரேமலதாவின் தாயார் அம்சவேணி (83) மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி திருமிகு. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் திருமிகு. அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் திருமிகு. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கமல்

தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் திரு. எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான திருமதி. அம்சவேணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டிடிவி தினகரன்

தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் திருமதி அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த், சகோதரர் L K சுதீஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *