• October 7, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ரஷ்மிகா இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்து முடிந்திருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

ஆனால் அதனை இருவரும் அவர்கள் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா சென்ற கார்

தெலுங்கானா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது விஜய் தேவரகொண்டா கார் மீது வேறொரு கார் மோதியிருக்கிறது.

கார் சேதமாகியிருந்தாலும் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கார் விபத்து குறித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவந்ததால் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நலமாக இருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார்.

 விஜய் தேவரகொண்டா பதிவு
விஜய் தேவரகொண்டா பதிவு

அதில் “ஆல் இஸ் வெல், நான் நலமாக இருக்கின்றேன். கார் சேதமடைந்துள்ளது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கின்றோம்.

வீட்டிற்கு சென்றதும் வொர்க்அவுட் செய்தேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும் எனது நன்றிகள். இந்த செய்தியைக் கேட்டு யாரும் பதற்றமடைய வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *